விக்ரம் நீங்க செய்யறது ரொம்ப தப்பு.. உங்களை வைத்து படம் பண்ணும் போது பாலாவும் அப்படித்தான்

விக்ரம் சமீப காலமாக அவருடைய படம் சரியாக ஓடாததால் ரொம்பவும் திணறிக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் நடித்து முடித்துள்ள கோப்ரா படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். இந்தப் படம் மட்டும் அவருக்கு ஓடவில்லை என்றால் சினிமாவில் கேரியர் முடியும் அளவிற்கு போய்விடுவார்.

இப்பொழுது அவர் புத்திசாலித்தனமாக பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதாவது விக்ரம் ஒரு வெப் தொடர் எடுக்க போகிறாராம். அதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் இதில் அவர் எந்த ஒரு புதுமுக இயக்குனருக்கும் வாய்ப்பு தர மாட்டாராம்.

ஏற்கனவே விக்ரம் ஒருமுறை மேடையில் நான் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்று வெளிப்படையாக கூறினார். விக்ரம் பேசிய அந்த பேச்சு அப்போது இளம் இயக்குனர்கள் இடையே மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

சொல்லப்போனால் அவர் மீது ஒட்டுமொத்த இயக்குனர்களும் பெரிய கோபத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் புது முக இயக்குனர்களை புறக்கணித்திருக்கிறார். இது தற்போது ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இதை கேள்விப்பட்ட இயக்குனர்கள் பலரும் தற்போது விக்ரம் செய்கிறது ரொம்ப தப்பு என்று அவரை வசைப்பாடி வருகின்றனர். அது மட்டுமின்றி நீங்கள் ஹீரோவாக உருவாகும் போது உங்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் புதுமுக இயக்குனர்கள் தான் என்றும் கோபத்துடன் கொந்தளித்து வருகின்றனர்.

அந்த வகையில் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையும், அடையாளத்தையும் கொடுத்த திரைப்படம் சேது. அந்த திரைப்படத்தை எடுத்த பாலாவும் அப்போது ஒரு புதுமுக இயக்குனர் தான். அதனால் விக்ரம் பழசை எல்லாம் மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். தற்போது அந்த வெப் தொடரில் விக்ரம் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.