விக்ரம் படத்திற்கு தொடரும் சிறப்பு காட்சிகள் கூறிய உதயநிதி.. இது அரசியலா இல்ல நட்பா.!

எங்களுக்கு வேண்டும் என்றால் நாங்கள் சட்டத்தையே மாற்றிக் கொள்வோம் என்ற பாணியில் உதயநிதி ஸ்டாலின் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியாகும் பல திரைப்படங்களின் தியேட்டர் விநியோகஸ்தராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சமீபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.இந்த வெற்றி விழாவில் கமலஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிரூத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு மேடையில் உரையாற்றினர். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விக்ரம் திரைப்படம் வெற்றி அடையும் என்று நினைத்தேன்.ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று சற்று கூட நினைக்கவில்லை என்று தெரிவித்தார்

மேலும் விக்ரம் திரைப்படம் இவ்வளவு வெற்றியடையும் என கமலஹாசன் கூட அறிந்திருக்க மாட்டார் என்றும் இப்படத்தின் திரைப்பட விநியோகஸ்தராக இருப்பதற்கு நான் பெருமை கொள்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், விக்ரம் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பல தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை. இருந்தாலும் முன்னணி நடிகர்களான தளபதி விஜய், அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்படும்

ஆனால் விக்ரம் திரைப்படம் ரிலீசாகி மூன்று வாரங்களை கடந்து வரும் நிலையில், தற்போது வரை இப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினே மேடையில் சொன்னது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தை தயாரித்த கமலஹாசனுக்காக உதயநிதி ஸ்டாலின் இப்படி சட்டத்தையே மாற்றி வருவது நட்பாக இருக்குமா அல்லது அரசியல் ரீதியாக இருக்குமோ என்பது குழப்பமாக உள்ளது.மேலும் விக்ரம் திரைப்படம் இன்னும் ஐந்து அல்லது ஆறு வாரங்கள் திரையரங்குகளில் ஓடுமெனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.