விக்ரம் படத்தில் டூயட் பாடலை தூக்கிய லோகேஷ்.. புட்டு புட்டு வைத்த நடிகை!

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நாள் முதல் தற்போது வரை வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. 120 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை உலக அளவில் 250 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸை குவித்திருக்கிறது.

தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் இந்தப் படத்தின் வசூல் கூடிய விரைவில் 500 கோடிக்கு மேல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, மைனா நந்தினி, சூர்யா, சிவானி உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனம் பெற்றிருக்கின்றனர்.

எனவே சோசியல் மீடியாவில் விக்ரம் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருப்பதால், விக்ரம் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்த காயத்ரி சுவாரசியமான தகவல் ஒன்றை பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதாவது விக்ரம் படத்தில் பகத் பாசிலுடன் தனக்கு சூப்பர் பாடல் ஒன்று இருந்ததாகவும் படத்தில் டுரேஷன் காரணமாக அந்தப்பாடல் காட்சி நீக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நீக்கப்பட்ட பாடலை பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி இயக்கியுள்ளார். இந்த பாடல் மட்டும் வெளிவந்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும். இருப்பினும் விக்ரம் படத்தில் நீக்கப்பட்ட இந்தப் பாடல் காட்சி இனி வரும் நாட்களில் யூடியூபில்  வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என காயத்ரி தெரிவித்திருக்கிறார்.

மேலும் விக்ரம் படத்தில் இந்த பாடல் காட்சி நீக்கப்பட்டது என லோகேஷ் காயத்ரியிடம் சொன்னபோது மிகுந்த வருத்தம் அடைந்ததாகவும், அதன் பிறகு தன்னுடைய மனதை பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். உலகெங்கும் திரையரங்கில் பின்னி பெடல் எடுத்து கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளின் டப்பிங் காயத்ரியே கொடுத்ததாகவும் பெருமிதம் கொள்கிறார்.

விக்ரம் படத்தில் நடித்தது பெருமிதமாகவும் அதேசமயம் கமலஹாசனுடன் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது துரதிஸ்டவசமாக நினைக்கிறார். விக்ரம் படத்திற்கான படப்பிடிப்பு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டதால் கமல்ஹாசன் அவர்களை படப்பிடிப்பு தளத்தில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சினிமாவில் நுழைந்து 10 வருடம் ஆன நிலையில், என்றைக்கு கமலஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கிறதோ அன்றைக்கு என்னுடைய பிறவி பலனை அனுபவித்ததாக ஆனந்தம் கொள்வேன் என காயத்ரி விக்ரம் படத்தில் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

The post விக்ரம் படத்தில் டூயட் பாடலை தூக்கிய லோகேஷ்.. புட்டு புட்டு வைத்த நடிகை! appeared first on Cinemapettai.