விஜய்யால் ஆக்சன் ஹீரோவாக மாறிய நடிகர்.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்

தமிழ் திரையுலைகில் தற்போது நடிகர் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கலெக்ஷனை பார்த்து வருகிறது. தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் நடிக்க முடியாமல் போன ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த நடிகர் விஷாலுக்கு இதுதான் இரண்டாவது திரைப்படம். ஆனால் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. இதன் மூலம் அவர் ஆக்சன் ஹீரோவாகவும் மாறினார்.

ஆனால் லிங்குசாமி முதலில் இந்த கதையை விஜய்யிடம் தான் கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் விஜய் சச்சின், சிவகாசி, திருப்பாச்சி உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அதன் காரணமாக இந்த திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

அதன் பிறகு தான் விஷால் இந்த படத்திற்கு ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 10 கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூலித்து லாபம் பார்த்தது. அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமிக்கும் இந்தப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு சில வருடங்களிலேயே இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவதற்கு முயற்சி செய்தாலும் சில தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தது. பின் பல முயற்சிகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.