விஜய்யின் மீது பூசப்படும் மத சாயம்.. சரியான பதிலடி கொடுத்த எஸ்ஏசி

சமீபத்தில் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் பிறந்தநாள் புகைப்படம் இணையத்தில் வெளியானது. தனது மனைவியுடன் கேக் வெட்டி இந்த பிறந்தநாளை எஸ்ஏசி கொண்டாடி இருந்தார். ஆனால் தந்தையின் பிறந்தநாளுக்கு கூட விஜய் வராதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

எஸ் ஏ சந்திரசேகர் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் விஜய். அதன் பிறகு தனது கடின உழைப்பால் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். எஸ்ஏசி அவர்கள் விஜயகாந்துக்கு நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சந்திரசேகர் மற்றும் விஜய் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதாவது விஜய் பெயரில் அவரது தந்தை எஸ்ஏசி கட்சி தொடங்கியதால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தது. இதனால் விஜய் தனது தந்தையுடன் பேசுவதே இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இந்நிலையில் விஜய்யின் தந்தை கிறிஸ்டின் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் விஜய்யின் அம்மா ஷோபனா இந்து மதத்தைச் சார்ந்தவர்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் விஜய்யின் இயற்பெயர் ஜோசப் விஜய். இதனால் விஜய் தனது படத்தில் கிறிஸ்டின் மதத்தை சித்தரிப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனால் அவ்வப்போது விஜய்யின் தந்தை எஸ்ஏசி தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் எஸ்ஏசி 80 வயதை பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி உடனாகி ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் எஸ்ஏசி மற்றும் ஷோபனா இருவரும் தங்களது மகன் விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து இருந்தனர்.

இதை அறிந்த ரசிகர்கள் மகனுக்கு தந்தை மீது கோபம் இருந்தாலும் பெற்றோர்களாக அவர்களது கடமையை செய்து வருகிறார்கள் என எஸ்ஏசியை பாராட்டி வருகின்றனர். மேலும் இனி ரசிகர்கள் மதத்தை வைத்து விஜய்யை விமர்சிக்கக் கூடாது என கூறிவருகின்றனர்.