விஜய்யுடன் இணைவதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்.. வெளியான தளபதி 67 அப்டேட்

தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களும் இவரின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அளவுக்கு இளம் வயதிலேயே இவர் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவரின் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்துள்ளதால் இந்த வெற்றிக் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல் பலரிடமும் இருக்கிறது.

அதற்கு ஏற்றார்போல் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் ட்ரெய்லர் பலரும் ரசிக்கும் வண்ணம் கலக்கலாக இருக்கிறது. இதுவே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பற்றிய ஒரு அப்டேட்டை சூசகமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜிடம் தளபதியை இயக்கப் போகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஆமாம் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நாசுக்காக கூறினார்.

இருப்பினும் உங்களின் வெற்றி கூட்டணியில் உருவாகும் இப்படம் மாஸா, கிளாஸா என்ற கேள்விக்கு அவர் இரண்டும் கலந்தது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இது பற்றிய தகவல் ஊடகங்களில் வெளிவந்தாலும் இதைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவலை யாரும் அறிவிக்காமல் இருந்தனர். தற்போது லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கும் இந்த செய்தி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு வசூலை வாரி குவித்தது. அந்த வகையில் இந்தத் திரைப்படமும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.