விஜய், அஜித் இணையும் பான் இந்தியா படம்.. வசூல் இயக்குனர் வெளியிட உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் பாக்ஸ் ஆபீஸ் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இதனால் இவர்களை வைத்து படங்களை தயாரிப்பதற்கு முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அந்த வரிசையில் விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்திலும், அஜித் ஏகே 61 திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், அஜித் இருவரும் ஏற்கனவே ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். 1995ம் ஆண்டு வெளிவந்த அந்தத் திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் தனித்தனியாக பயணிக்க ஆரம்பித்தனர்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. மேலும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

அவர்கள் இருவரும் இணையப்போகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அவருடைய தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என்ற அவர் பலமுறை கூறியிருக்கிறார். தற்போது அவருடைய கனவு நனவாக இருக்கிறது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானது என்று கூறப்படுகிறது. அதனால் விரைவில் இந்த திரைப்படம் குறித்த சூப்பரான அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.