விடாப்பிடியாக இருக்கும் ராதிகா.. கோபி போட்ட பலே திட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் தொடர்கள் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கோபியின் தந்தை ராமமூர்த்தி பிறந்தநாளுக்கு பாக்கியா, வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரே மாதிரியான புடவையை எடுத்து வந்துள்ளார்.

இதைப்பார்த்த தனம், மீனா எல்லாரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் ராதிகா கிடுக்கிப் பிடியாக கோபி பர்த்டே பார்ட்டிக்கு வரவேண்டும் இல்லையென்றால் ஜென்மதுகும் உங்களோட பேச மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் கோபி, வீட்டில் உள்ள அனைவர் மீதும் கோபத்தில் எரிந்து விழுகிறார்.

பின்பு ராதிகா, கோபிக்கு போன் செய்த நாளைக்கு பிறந்த நாள் பங்ஷனுக்கு போகவேண்டும் என கூறுகிறாள். உடனே கோபி யாரு பர்த்டே, யாரு டீச்சர் என கேட்க நாளைக்கு நீங்க வரலேன்னா அவ்வளவுதான் என ராதிகா போனை கட் செய்கிறார். உடனே கோபி தனது நண்பனுக்கு போன் செய்து ராதிகா சொன்னதை கூறுகிறார்.

உன்னோட வீட்டுக்கே ராதிகாவை கூட்டிகிட்டு போகப்போற நாளைக்கு உனக்கு சங்குதான் என்ன கோபி நண்பர் கூறுகிறார். ஆனால் கோபி கண்டிப்பாக நான் அப்படி நடக்குமா விடமாட்டேன் என உறுதியாக கூறுகிறார். நாளைக்கு பர்த்டே ஃபங்ஷன் நடந்தா தானே அதையே நிறுத்திடுவேன் என கோபி சொல்வதை பின்னாலிருந்த கதிர் கேட்கிறார்.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கோபியின் நடவடிக்கையின் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு சந்தேகம் எழுகிறது. மேலும் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை எழில், ஜீவா, கதிர் கண்ணன் ஆகியோர் செய்கின்றனர். வீடெங்கும் தோரணம், பலூன் என பாக்கியலட்சுமி வீடு களைகட்டி உள்ளது.

இந்நிலையில் நாளை பிறந்தநாள் நடக்குமா அல்லது கோபி ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்து நிறுத்தி விடுவாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும். இவ்வாறு பல எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த மகா சங்கமம் வர இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.