வித்தியாசமாக ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்.. ரேஸுக்கு தயாராகும் பிரின்ஸ்

சிவகார்த்திகேயனின் கொடி தற்போது தமிழ் சினிமாவில் உயர்ந்து பறக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிவகார்த்திகேயன் அதன்மூலம் சுதாரித்துக்கொண்டு டாக்டர், டான் என வெற்றிப்படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் 100 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன், சத்யராஜ் காம்போவில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

மேலும் இதே கூட்டணியில் பிரின்ஸ் படம் உருவாவதால் கண்டிப்பாக இதுவும் காமெடி ஜானரில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரன்ஸ் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. அதாவது கார்த்தியின் சர்தார் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் மோத உள்ளதாக தகவல் இணையத்தில் உலாவியது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வீடியோவின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. அதாவது இப்படத்தில் ரிலீஸ் தள்ளி போவதற்கு காரணம் சத்யராஜ் தான் என சிவகார்த்திகேயன் கூறுகிறார். அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தபோது சாதுவாக இருந்தார் என்றும் பாகுபலி படத்திற்குப் பிறகு கட்டப்பா என்ற தெனாவட்டு உடன் இருக்கிறார் என வேடிக்கையாக சிவகார்த்திகேயன் பேசினார்.

பின்னாலிருந்த சத்யராஜ் வந்தவுடன் அப்படியே சிவகார்த்திகேயன் பல்டி அடிக்கிறார். மேலும் இப்படத்தின் கதாநாயகி உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியாவும் இந்த வீடியோவில் உள்ளார். இந்நிலையில் ஒரு பண்டிகை நாளில் தான் பிரின்ஸ் படத்தை வெளியிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதாவது இந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் மாதம் பிரின்ஸ்படம் வெளியாக உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல பெரிய நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த தீபாவளி ரேஸில் தற்போது சிவகார்த்திகேயனின் படமும் பிரின்ஸ் இணைந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரிலீஸ் தேதியை அறிவித்த வீடியோ