வினோத் படத்தில் ஏற்பட்ட குழப்பம்.. கமல் செய்ததை மறந்து பெரிய மனிதராக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தன்னை மதிக்காமல் இருந்தாலும் பெரிய மனுஷனாக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி.

வினோத் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு கமல் படத்தை தான் வினோத் இயக்க உள்ளதாக அறிவிதனர். அதாவது இப்போது அஜித்தை வைத்து வினோத் துணிவு படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி வினோத்துக்கு கொடுத்த தேதியை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அதாவது அந்த தேதியில் நீங்கள் கமல் படத்தை எடுங்கள். அந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என வினோத்திடம் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளாராம்.

Also Read : விஜய் சேதுபதி இடத்தில் மாஸ் ஹீரோவை இறக்கும் லோகேஷ்.. கைதி 2வில் செய்யப்போகும் சம்பவம்

இந்த விஷயம் தெரிந்த பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து கமலின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ்க்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு வாட்ச் மற்றும் பலருக்கு பரிசுகளை வாரி வழங்கி இருந்தார் உலக நாயகன் கமல். ஆனால் விஜய் சேதுபதிக்கு கமல் எந்த பரிசும் வழங்கவில்லை.

Also Read : பிக்பாஸில் இருந்து விலகும் கமல்.. மொத்த தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய அதிர்ச்சி சம்பவம்

அதுமட்டுமின்றி விழா மேடையிலையும் விஜய் சேதுபதியை பற்றி பெரிய அளவில் கமல் எதுவுமே பேசவில்லை.ஆகையால் விஜய் சேதுபதி இடத்தில் எந்த நடிகர் இருந்தாலும் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதையெல்லாம் விஜய் சேதுபதி மறந்து மீண்டும் கமலுடன் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

இது விஜய் சேதுபதியின் பெரிய மனிதருக்கான குணநலத்தை காட்டுகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதனால்தான் விஜய் சேதுபதியின் வளர்ச்சி தற்போது தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியாக உள்ளது என்றும் பலர் கூறுகிறார்கள்.

Also Read : அக்கட தேசத்து விஜய் சேதுபதி இவர்தான்.. கமலே கூப்பிட்டு பாராட்டிய ஹீரோ