விவாகரத்தால் வீணாப்போன தனுஷ்.. பழைய நிலைக்கு மீண்டு வருவாரா.!

தனுஷின் திரைப்படங்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதே தனுஷின் சினிமா வாழ்க்கை முடிவதற்கான காரணமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட தனுஷ் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக ஒரு நடிகர் விவாகரத்து செய்து கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு பட வாய்ப்புகளும் ரசிகர்களிடம் மரியாதையும் குறையும் என்பது வழக்கம். ஆனால் தனுஷ் விவாகரத்து செய்யும் போது நம்பிக்கையுடன் என் முயற்சியில் மூலமாக கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என உறுதியோடு இருந்தார்.

ஆனால் தனுஷ் விவாகரத்து செய்தது சாதாரண வீட்டு பெண்ணை அல்ல, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, இதனிடையே தனுஷுக்கு பல பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் இவர் இயக்கி நடிக்க உள்ள திரைப்படத்திற்காக கதாநாயகிகள் தேர்வு நடைபெற்றது. ஆனால் தனுஷுடன் நடித்தால் தங்களுக்கு மார்க்கெட் இருக்காது என பல நடிகைகள் தனுஷுடன் நடிக்க சம்மதிக்கவே இல்லை.

இதுவே தனுஷுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் தோல்வியடைந்த நிலையில், தற்போது தனுஷ் எப்படியாவது வெற்றி படம் கொடுத்தால் தான் சரிவரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது தனுஷின் நடிப்பில் தனது அண்ணன் மற்றும் இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இத்திரைப்படங்களில் வெற்றிக்கொடுத்தால் மட்டுமே தனுஷுக்கு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் வரும்.

மேலும் தனுஷின் படங்கள் என்றாலே ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருப்பர். ஆனால் தனுஷின் விவாகரத்திற்கு பின்னர், அந்த எதிர்ப்பார்ப்பும் மக்களிடையே குறைந்துள்ளது. எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது அந்த அளவுக்கு தனுஷ் பல கஷ்டங்களை சந்தித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

The post விவாகரத்தால் வீணாப்போன தனுஷ்.. பழைய நிலைக்கு மீண்டு வருவாரா.! appeared first on Cinemapettai.