விஷாலின் குடுமியை பிடித்து ஆட்டிய நீதிமன்றம்.. அதிரடி உத்தரவை போட்ட நீதிபதி

நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாகவே ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். கடன் தொடர்பாக அவர் மீது லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தங்களுக்கு தர வேண்டிய கடன் தொகையை அவர் கொடுக்கவில்லை என்றும் அவருடைய படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

விஷால் தன்னுடைய பட தயாரிப்புக்காக பைனான்சியரிடம் ஒரு 21 கோடி ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். அந்த கடனுக்கு லைகா நிறுவனம் பொறுப்பேற்று ஒப்பந்தமும் போடப்பட்டது. மேலும் விஷால் நடிப்பில் வெளிவரும் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையும் லைகா நிறுவனத்திற்கு சேர வேண்டும் என்றும் கையெழுத்திடப்பட்டது.

Also read:லத்தி படத்திற்கு கம்பீரமாக உடம்பை ஏற்றிய விஷால்.. வைரலாகும் ஜிம் புகைப்படம்

மேலும் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் விஷால் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் ஒப்பந்தப்படி எதுவுமே நடக்கவில்லை. பொதுவாகவே விஷால் அவருடைய தயாரிப்பில் உருவாகும் படங்களின் கணக்கு வழக்குகளை கேரவனில் வைத்தே முடித்து விடுவார்.

இது அவர் படத்திற்கு மட்டும்தான் மற்றவர்களுக்கு படம் பண்ணுவது என்றால் அதை அப்படியே டீலில் விட்டு விடுவார். இதனால் கடுப்பான லைக்கா நிறுவனம் அவருடைய வீரமே வாகை சூடும் படத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த நீதிபதி விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் வங்கியில் மூன்று வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார். ஆனால் விஷால் அதை செய்யவில்லை.

Also read:விஷால் நடிப்பில் வெற்றி கண்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. ஒவ்வொன்றும் முரட்டு கதாபாத்திரம் ஆச்சே.!

இந்நிலையில் அந்த விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் ஆஜரான விஷால் தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும், அதற்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் ஆறு மாத காலம் வரை என்னால் கடனை திருப்பிக் கொடுக்க முடியாது என்று தெனாவட்டாக கூறி இருக்கிறார்.

இதனால் கடுப்பான நீதிபதி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் உங்களால் கடனை அடக்க முடியவில்லையா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் விஷாலின் சொத்து விவரங்கள் அடங்கிய பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்றும், அதில் விஷால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read:ரொமான்ஸ் பண்ண அவர்தான் வேண்டும்.. சுறா மீனுக்கே ரகுல் பிரீத்தி சிங் விரிக்கும் வலை