வெறி பிடித்த நாயை போல் தனிமனிதனுக்கு நடக்கும் அநீதி.. வைரலாகும் மாதவனின் ராக்கெட்டரி ட்ரெய்லர்

நடிகர் மாதவன் கதை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் திரைப்படம் ராக்கெட்டரி. அவர் தான் இந்த படத்தின் டைட்டில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இப்படத்திற்கு தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் இப்படம். பல கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ராக்கெட்டரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே காவல்துறையினரால் மாதவன் தாக்கப் படுவது போன்று ஆரம்பிக்கிறது. அதைத்தொடர்ந்து மாதவனுக்கு நடக்கும் பல அநீதிகளையும் மிரட்டலான பின்னணி இசையுடன் காட்டப்பட்டுள்ளது.

மேலும் ராக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. அதிலும் சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யா, ஒரு மனிதனை தலைதூக்க முடியாமல் செய்வதற்கு தேச துரோகி என்ற பட்டம் கொடுத்தால் போதும் என்ற வசனம் நிச்சயம் கைத்தட்டலை பெறும்.

நம்பி நாராயணன் என்ற தனி மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மாதவன் இந்த படத்தின் மூலமாக உரக்க சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து உருவாக்கியிருக்கும் மாதவனுக்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்கும். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லர் பலரின் பாராட்டுகளைப் பெற்று படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

The post வெறி பிடித்த நாயை போல் தனிமனிதனுக்கு நடக்கும் அநீதி.. வைரலாகும் மாதவனின் ராக்கெட்டரி ட்ரெய்லர் appeared first on Cinemapettai.