வெற்றிமாறனிடம் மல்லுக்கட்டியும் புரோஜனம் இல்லை.. சந்தானத்துக்கு போட்டியாக கலக்கப் போகும் சூரி

3;

நடிகர் சூரியின் சொந்த உணவகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் ஹோட்டல் உரிமையாளர், மேலாளரை நேரில் ஆஜராக சொல்லியிருக்கிறார்கள். இந்த ஐடி ரெய்டு கோலிவுட்டில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சூரி, மதுரையில் தெப்பக்குளம், ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை, அவனியாபுரம், அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற இடங்களில் ‘அம்மா’ என்னும் பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல்களை சூரியின் சகோதரர் பார்த்து கொள்கிறார்.

Also Read: புரோட்டா சூரியை பொறிவைத்து பிடித்த அதிகாரிகள்.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு தெரியலையே.!

இந்த ரெய்டு சூரி வருமான வரி கட்டவில்லை என்பதற்காக நடந்தது இல்லை. ஹோட்டலில் GST இல்லாமல் உணவுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததால் நடந்த ரெய்டு. இதை மீடியாக்கள் மிகப்பெரிய கதையாக மாற்றி விட்டனர்.

இந்த ஐடி ரெய்டு ஒரு பக்கம் இருக்க, சூரிக்கு இன்னொரு பக்க பிரச்சனையே இயக்குனர் வெற்றிமாறன் தானாம். இதற்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் விடுதலை திரைப்படம் தான். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read: சூசக முடிச்சு போட்ட வெற்றிமாறன்.. எவ்வளவு அடித்தாலும் விடுதலை பட தயாரிப்பாளர் தாங்குவதன் ரகசியம்

தற்போது சூரி இந்த படத்தை சீக்கிரம் முடிக்குமாறு வெற்றிமாறனிடம் கேட்டு கொண்டிருக்கிறாராம். வெற்றிமாறன் ஒரே நேரத்தில் வாடிவாசல், விடுதலை சூட்டிங்கில் பணியாற்றுவதால் அவரால் கொஞ்சம் லேட் ஆகிறதாம். ஆனால் சூரிக்கோ அடுத்தடுத்து இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறதாம்.

மதயானை கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். மேலும் ஒரு புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருப்பதால் விடுதலை படத்தை சீக்கிரம் முடித்தே தீர வேண்டும் என வெற்றிமாறனிடம் மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார் சூரி. நடிகர் சந்தானத்தை அடுத்து சூரியும் இப்போது ஹீரோவாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார்.

Also Read: சூரிக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல காமெடி நடிகர்.. வெற்றி மாறனிடம் வேணாம் என மறுத்த பிரபலம்