வேற லெவலில் ஆச்சரியப்படுத்திய ஆண்டவர்.. மேடையில் புகழ்ந்து தள்ளிய லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த அந்த விழாவில் விக்ரம் திரைப் படத்தின் டிரைலரும் செம மாஸாக வெளியிடப்பட்டது.

ஆண்டவரின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், பட்டையைக் கிளப்பும் வசனங்களும் பலரையும் வியக்க வைத்தது. மேலும் இந்த வயதிலும் கமல் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் என்று பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

இது குறித்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை லோகேஷ் கனகராஜ் விக்ரம் இசை வெளியீட்டு விழா மேடையில் ஆச்சரியமாக தெரிவித்தார். அதாவது விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தபோது லோகேஷ் கனகராஜ், கமலிடம் ஒரு காட்சிக்காக ஆம்ஸ் தெரிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக கமல் அணிந்த டி ஷர்ட்டை கை பகுதியில் கொஞ்சம் தூக்கிவிட சொல்லியிருக்கிறார். அதற்கு உடனே கமல் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு புஷ் அப் செய்துள்ளார். இருபத்தி ஆறு முறை புஷ் அப் செய்து கமல் அந்தக் காட்சிக்காக தயாராகி இருக்கிறார்.

அதை பார்த்துக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. ஏனென்றால் அந்த காட்சி இரவு இரண்டு மணிக்கு படமாகி கொண்டிருந்து. இந்த வயதிலும் நடிப்பில் இவ்வளவு ஆர்வம் கொண்ட அவருக்கு முன்னால் இளைஞர்கள் ஒன்றுமே இல்லை என்று அவர் ஆண்டவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

நடிப்பு என்று வந்துவிட்டால் கமல் அந்த கேரக்டராகவே மாறி விடுவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்த வயதிலும் அவருடைய அந்த கடமையுணர்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் நடந்த பல சுவாரஸ்ய சம்பவங்கள் அனைத்தும் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.