ஷாருக்கானுக்கு வில்லனாகும் பாகுபலி நடிகர்.. ஜவான் படத்தில் சம்பவம் செய்யும் அட்லி

ஜவான் படத்தின் மூலம் இயக்குனர் அட்லி பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். தமிழில் ராஜாராணி, மெர்சல், தெறி, பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சினிமாவுக்கு வந்த மிகக்குறுகிய காலத்திலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்பு ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருந்ததால் சாருக்கானால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் வில்லன் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் புதிதாக பாகுபலி நடிகர் இணைந்துள்ளார்.

இப்படத்தில் பாகுபலிக்கு வில்லனாக பல்வாள் தேவன் கதாபாத்திரத்தில் நடித்த ராணா டகுபதி வில்லனாக நடிக்கயுள்ளாராம். அதாவது ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு இணையான தோற்றத்தில் உள்ள ராணா டகுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார் அட்லி.

இதுவரை மும்பையில் நடந்து வந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஷாருக்கானுடன் இணைந்து ராணாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் கேலிகளுக்கு உள்ளானது. அதாவது ஹாலிவுட் படத்தில் உள்ள கெட்டப்பை அப்படியே அட்லி காப்பி எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கேலி செய்து வந்தனர். அவற்றிற்கெல்லாம் சரியான பதிலடியாக ட்ரைலர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.