ஷோபாவை கண்மூடித்தனமாக அடித்தேன்.. வெளிப்படையாக கூறிய எஸ்ஏ சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இவர் இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் இவருடைய மகன் நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர்தான்.

தற்போது விஜய் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக முன்னணியில் இருக்கிறார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவர் சொந்தமாக யூடியூபில் யார் இந்த எஸ்ஏசி என்ற சேனல் ஆரம்பித்து அதில் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களைப் பற்றியும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

இப்போது அதில் தன்னுடைய மனைவி ஷோபாவை பற்றி பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ஷோபா எனக்கு மனைவியாக இருந்ததை விட என் குழந்தைகள் விஜய் மற்றும் வித்யாவுக்கு தாயாக தான் இருந்துள்ளார்.

அந்த அளவிற்கு எனக்கும், அவருக்கும் எங்கள் பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருந்தது. நான் கொஞ்சம் கோபக்காரன், முரடன் அதனால் பல சமயங்களில் நான் கோபத்தினால் சோபாவை கண்மூடித்தனமாக அடித்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுத்தது கிடையாது.

அது மட்டுமல்லாமல் நான் கோபத்தினால் சண்டையிட்டு விட்டு பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்பேன். அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். அந்த அளவிற்கு எனக்கும், ஷோபாவிற்கும் நிறைய புரிதல்கள் இருக்கிறது. என் மனைவி இல்லை என்றால் நான் கிடையாது.

மேலும் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்து வருகிறோம். அன்றிலிருந்து இன்றுவரை ஷோபாவின் மீது நான் வைத்திருக்கும் காதல் சிறிதளவு கூட மாறவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தன் மனைவியை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்று புரிகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் என்றும் இதே காதலுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.