10ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்ற ஏஆர் ரகுமான்.. PS1 படத்திற்காக வாங்கப்பட்ட இசைக்கருவிகளின் லிஸ்ட்

வரலாற்று நாவலை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் டீசர் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மத்தியில் இந்தப் படத்தை குறித்த ஆர்வத்தை எகிற வைத்திருக்கிறது.

இந்நிலையில் படத்திற்காக இசையமைத்திருக்கும் ஏஆர் ரகுமான் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்ற விஷயம் தற்போது ரசிகர்களை வியப்படைய செய்திருக்கிறது. இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களை 10-ம் நூற்றாண்டு சோழர் காலத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக ஏஆர் ரகுமான் டீம், 2 வருடங்களாக ஆராய்ச்சி நடத்தி இருக்கிறது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக இசைக்கருவிகளை குறித்த பழமையான நகரங்கள் மற்றும் கோயில்களுக்குச் சென்று ஆராய்ச்சி நடத்தியிருக்கின்றனர். அதன்மூலம் ஏஆர் ரகுமான் டீம், இந்தோனேஷியாவின் பாலி நகரத்திற்கு சென்று அங்கு பல தோல் கருவி வாத்தியங்களை வாங்கி வந்துள்ளார்.

அந்த ஆராய்ச்சியின் மூலம் பொன்னின் செல்வன் படத்திற்கு இசை அமைப்பதற்காக வாங்கிய இசைக்கருவிகளின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் எக்காளம், நாயனதாளம், தம்பாட்டம், பம்பை, துடி, கிடுகிட்டி, சுந்தரவளைவு, தப்பு, பஞ்சமுக வாத்தியம், நாதஸ்வரம், வீணை, உடுக்கை, உருமி, கொம்புஆகிய வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் ஏ ஆர் ரகுமான் பொன்னியின் செல்வன் படத்திற்காக இவ்வளவு வேலைகள் பார்த்திருக்கிறார் என்பதை அறிந்த பிறகு இந்தப் படத்தைக் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த படத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 30 முன்னணி பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்திருப்பதால் அவர்களுடைய ரசிகர்களும் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை பார்த்தாலே படம் வேற லெவலில் உருவாகியிருக்கிறது. இதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பங்களிப்பு குறித்து அவருடைய ரசிகர்கள் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.