2022 ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய 3 படங்கள்.. கேஜிஎஃப் 2-வை பின்னுக்கு தள்ளிய விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வசூல் வேட்டையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த படம் வெளியான முதல் நாளே 40 கோடி வசூலானதுடன் அன்று முதல் இன்று வரை எந்தவித நெகட்டிவ் விமர்சனமும் பெறாததால், சர்வதேச அளவில் வசூல் வேட்டையாடுகிறது. முதல் மூன்று நாட்களில் மட்டும் 100 கோடி வசூலை குவித்த விக்ரம், இதன் பிறகு எட்டு நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை தாண்டி சாதனை செய்திருக்கிற.

தற்போது இரண்டு வார முடிவில் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்திருக்கிறது. இதுவரை நடித்த படங்களில் எந்தப் படமும் இந்த அளவு வசூல் சாதனை செய்யாததால் விக்ரம் படமே முதல்முதலாக கமலஹாசனுக்கு இந்த பெருமையை தேடித் தந்ததால் உலகநாயகன் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.

அத்துடன் நடப்பாண்டில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படங்களின் லிஸ்டில் விக்ரம் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படமும், கன்னட ராக்கிங் ஸ்டார் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படமும் இந்த ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் லிஸ்டில் முதல் இரண்டு இடங்களை பிடித்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரேட்டிங்கை வைத்து பார்த்ததி,ல் தமிழ்நாட்டில் கேஜிஎஃப் 2 படத்தின் வசூலை விக்ரம் திரைப்படம் ஏற்கனவே முறியடித்திருக்கிறது. அதேபோன்று கூடிய விரைவில் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் விக்ரம் படத்தின் வசூல் தாண்டிவிடும்.

ஏனென்றால் அந்த அளவிற்கு தொடர்ந்து விக்ரம் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் இருப்பதால் திரையரங்கிலும் ரசிகர்களின் கூட்டம் குறையாமல் அலைமோதுகிறது.சென்னையில் மட்டும் இதுவரை 10 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் விக்ரம் திரைப்படம் 30 கோடிக்கு, மேலும் தெலுங்கில் 25 கோடிக்கும் வசூல் செய்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.