70களில் பிரபுதேவாவிற்கு இணையாக நடனமாடிய 3 நடிகர்கள்.. தாத்தாகளையும் ஆடவைத்த ஆனந்தன்

தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமா துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளது. இணையத்தின் மூலமாகவே நாம் நடனத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் 60, 70களில் பிரபுதேவாவுக்கு இணையாக நடனம் ஆடியவர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு 70களில் நன்கு நடனம் ஆடக் கூடிய மூன்று நடிகர்களை பார்க்கலாம்.

சி எல் ஆனந்தன் : 60களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்தவர் சி எல் ஆனந்தன். இவர் சண்டை காட்சிகளில் அசத்த கூடியவர். மேலும் நடிப்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளராகவும் சிஎல்ஆனந்தன் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த காலகட்டத்திலேயே பிரபுதேவாவுக்கு இணையாக நடனத்தை ஆடி அசத்தி இருப்பார்.

ரவிச்சந்திரன் : 60, 70களில் கதாநாயகனாகவும் அதன்பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் வெளியான படங்களும் பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது. இவருடைய அறிமுக படமான காதலிக்க நேரமில்லை படத்தில் விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடலுக்கு அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

ஜெய்சங்கர் : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் ஜெய்சங்கர் மிரட்டியிருக்கிறார். மேலும், கௌபாய் கேரக்டர்களுக்கு மட்டுமில்லை ஜெய்சங்கர் நடனத்திலும் அசத்த கூடியவர் என்பது பலருக்கு தெரியாத உண்மை.

தற்போது உள்ள பல பிரபல நடிகர்கள் நன்கு நடனம் ஆடக் கூடியவர்களாக இருந்தாலும் அந்த காலத்திலேயே தனக்குள் இருக்கும் நடனத் திறமையை இந்த நடிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போதும் அவர்களுடைய படத்தைப் பார்க்கும்போது பிரமிப்பாக, வியப்பாகவும் இருக்கும்.